காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று காங்கிரஸ் தலவைர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆன்லா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட டேடாகஞ்ச் பகுதியில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி சாவி கொடுத்தபடி ஆடுவார்கள்.பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மக்களின் பணத்தை எடுத்துக் கொண்டு விட்டார் மோடி. அதே பணத்தை காங்கிரஸ் மீட்டு, ஏழை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 வழங்கும் நியாய் திட்டம் அமல்படுத்தப்படும். நியாயத்திற்கும், அநியாயத்திற்கும் நடக்கும் போட்டி இது. இதில், உண்மை-பொய் இரண்டில் ஒன்றை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்,.