நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.