உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் யார் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று இந்தய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்க உள்ள உலக கோப்பை போட்டிக்காக அட்டவணை அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வரும் ஜூன் 5ம் தேதி நடக்க உள்ள துவக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது.
இந்த தொடரில் விளையாடவிருக்கும் 15 வீரர்களை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் அணியில் தேர்வான வீரர்கள் யார் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது குறித்து கேப்டன் கோலியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த கோலி, இந்திய அணியில் யார் எந்த இடத்தில் விளையாடுவார்கள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.