கூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித்! தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்!

தில்லிக்கு மட்டும் ஒரு கூட்டணி போடலாம் என்று ஆம் ஆத்மி கட்சியுடன் வெகுநாட்கள் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டு வந்த நிலையில், அது சரியாக வராததால் தனித்தே களம் காண முடிவு செய்துவிட்டது காங்கிரஸ்!

தில்லிக்கு மட்டும் ஒரு கூட்டணி போடலாம் என்று ஆம் ஆத்மி கட்சியுடன் வெகுநாட்கள் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டு வந்த நிலையில், அது சரியாக வராததால் தனித்தே களம் காண முடிவு செய்துவிட்டது காங்கிரஸ்!

தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்ஷித் உள்பட 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தில்லியில் தனித்துப் போட்டியிடும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தலைநகா் தில்லியில் 6ம் கட்டத் தேர்தல் நடைபெறும் மே 12ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தில்லியில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும், ஆளும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட விரும்பின. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க தாங்கள் தயாராக இருப்பதாகத் தொிவித்திருந்தாா். ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இரு கட்சிகளும் வேட்பாளா்களை அறிவிப்பதில் இழுபறியில் இருந்தன.

ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், கூட்டணிப் பேச்சு மட்டும் இழுபறியிலேயே இருந்தது. காரணம், தில்லிக்கு மட்டும் கூட்டணி என்றும், இருக்கும் 7 தொகுதிகளில் எப்படி பங்கிடுவது என்ற குழப்பமும் இரு கட்சிகளுக்கும் இருந்து கொண்டே வந்தது.

இந்நிலையில், தில்லியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.23ம் தேதியான நாளையே கடைசி நாள் என்பதால், இரு கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்படி இருந்தும் கூட வேட்பாளர்களை அறிவிக்காமல் இரு கட்சிகளுமே காலம் தாழ்த்தியதுடன், கூட்டணிக்கு யார் அதிக சீட் விட்டுக் கொடுப்பார்கள் என்ற எதிர்காலக் கணக்கைப்போட்டுக் கொண்டு காத்திருந்தன.

இந்நிலையில், 7 தொகுதிகள் கொண்ட தில்லியில் 6 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பட்டியலில் தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்ஷித் தில்லி தென்கிழக்கு தொகுதியிலும், ஜே.பி.அகா்வால் சந்தினீ சௌக் தொகுதியிலும், அரவீந்தா் சிங் கிழக்கு தொகுதியிலும், அஜய் மாக்கான் புதுதில்லி தொகுதியிலும், ராஜேஷ் லிலோதியா வடமேற்கு தொகுதியிலும், மகாபால் மிஸ்ரா மேற்கு தில்லியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபில், தாம் சாந்தினீ சௌக் தொகுதியில் போட்டியிடுவேன் என்று தொிவித்திருந்தாா். ஆனால் அவருக்கு அங்கே வாய்ப்பு வழங்கப் படவில்லை.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...