அழகான நாடு என்று 3 குழந்தைகளையும் மனைவியையும் அழைத்து வந்தார். குண்டுவெடிப்புகளால் அனைத்தையும் இழந்தார்! இலங்கையில் கதறி அழும் டென்மார்க் முதல் பணக்காரரைக் கண்டு பரிதாபப்பட்டு உடன் அழுதனர் உள்ளூர் மக்கள்!

டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன் (வயது 46). இவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உண்டு. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் அவர் சுற்றுலா வந்திருந்தார்.  நாடு நாடாக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழின்  பட்டியல்படி டென்மார்க் நாட்டின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் இவர்.

பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.  சொத்து மதிப்பு ரூ.50,000 கோடி மதிப்பில்!

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஆன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்தத் தகவலை Povlsen’s fashion நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

குடும்பத்தினரின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் ஞாயிறு அன்று நடந்த தொடர்ச்சியான குண்டுவெடிப்பில் பலியானவர்களில் 35 வெளிநாட்டினரும் அடக்கம். இறந்த வெளிநாட்டினர் சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

ஆன்ட்ரஸனுக்கு ஸ்காட்லாந்து நாட்டின் 1 சதவிகித நிலம் சொந்தமானது. இந்த நாட்டில் ஆன்ட்ரஸனுக்கும் இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம்பென்டசர்ஸனுக்கும் சொந்தமாக 200,000 ஏக்கர் நிலம் உள்ளது. பிரிட்டனில் அதிகளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன.

பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்ஸனுக்குச் சொந்தமான `பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புதான்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஆஸோஸ், ஸாலான்டோ நிறுவனங்களிலும் ஆன்ட்ரஸனுக்கு குறிப்பிடத்தக்க ஷேர்கள் உள்ளன.

இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம் – என்று குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு ஆன்ட்ரஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு கண்ணீர் மல்க நிற்கிறார். அவரது நிலையைக் கண்டு உள்ளூர்வாசிகள் அவருக்கு தங்கள்  ஆறுதலைத் தெரிவித்தனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...