4-வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஷீரடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பொதுக்கூட்டத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.