பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பி.இ.படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. கடந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக்கத்திற்கு பதிலாக, தொழில்நுட்ப இயக்குநரகமே ஆன்லைன் கலந்தாய்வு பணியை மேற்கொள்கிறது.
இன்று தொடங்கி , 31 ஆம் தேதி வரை, காலை 9 முதல் மாலை 6 மணி வரை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் கணினி இல்லாத மாணவர்கள் இலவசமாக பதிவு செய்துகொள்ள, மாநிலம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 3 ஆம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டு, ஜூன் 6 ஆம் தேதி முதல், 11 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் அந்த 42 மையங்களிலும் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து, ஜூன் 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு , ஜூன் 20 முதல் கலந்தாய்வு துவங்கும் என தொழில்நுட்ப இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதேபோல, வீடுகளில் கணினி வசதி உள்ள மாணவர்கள் பதிவு செய்து கொள்வதற்காக இணையதள முகவரிகளையும் தொழில்நுட்ப இயக்குநரகம் அறிவித்துள்ளது.