பாமக வேட்பாளர் பாலு திருவாரூரில் மாற்று கட்சியினர் பணம் பட்டுவாடா செய்து வருவதாக கூறி பொது மக்களுடன் தேர்தல் அதிகாரியின் அறைக்கு சென்று தேர்தல் அதிகாரி ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது திடீரென சுமார் 30,000 ரூபாய் ரொக்க பணத்தை மேசை மீது வீசி வாக்கு வாதம் செய்தார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் ஒன்றியத்தின் சில கிராமங்களில் அதிமுக மற்றும் திமுக தரப்பில் வாக்காளர்களுக்குதலா 500 ரூபாய் வழங்கப்படுவதாக பொது மக்கள் தரப்பில் பறக்கும் படையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பணம் கொடுத்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பாமக வேட்பாளர் பாலு பணத்தை மேசை மீது வீசி வாக்கு வாதம் செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.