திறமையான இளைஞர்களை அமைச்சரவையில் சேர்க்கும் நோக்கில், ஏழு மூத்த அமைச்சர்களை நீக்க, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அமைச்சரவையில் இருந்து சில அமைச்சரவைகளைக் கைவிடவும், புதிதாக சிலரை சேர்க்கவும் முடிவு செய்துள்ளோம்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து மே 13-ஆம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 3 ஆண்டுகால ஆட்சி திருப்தி அளித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை செயல்படுத்தியிருக்கிறோம். நாங்கள் அளித்த 160 வாக்குறுதிகளில் 120-ஐ நிறைவேற்றியிருக்கிறோம். 4-ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் தருணத்தில், மீதமுள்ள வாக்குறுதிகளையும் செயல்படுத்துவோம். இதுதவிர, புதிய பல திட்டங்களையும் அறிவித்து அமல்படுத்துவோம்.