இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலககோப்பை முன்பாக இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள் அணிகள், பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி, முதல் போட்டியில் கடந்த 25ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது.
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.