கரூர்:
சட்டமன்றத் தேர்தலில், முறைகேடு புகார் காரணமாக வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட் டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது. இந்தத் தொகுதிகளில் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால், இரு தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
இந்தத் தொகுதியில்தான் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.