எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம், மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை. முதலமைச்சரின் சமூகவலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் போடப்பட்ட பதிவு என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? என்றும் கேள்வி எழுப்பினார். மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நீட் விவகாரம் குறித்து பேசிய அவர், மாணவிகள் தற்கொலை வேதனை அளிக்கிறது, தற்கொலை என்பது தீர்வல்ல என்றும் அவர் தெரிவித்தார்.