உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டி நாட்டிங்காம்மில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாடிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியும் இத்தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரு அணிகளும் வெற்றியை தொடரும் நோக்குடன் களமிறங்க இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்