அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், நேற்று வெப்பத்தைத் தணிக்கும் வகையில், சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. குமரி கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை திடீரென கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசை வாக்கம், சாந்தோம், வடபழனி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், திருவான்மியூர், அடையார், பாலவாக்கம், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பெருங்குடி, தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. காலை 8.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை நீண்ட நேரம் விடாமல் நீடித்ததால், வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டனர். சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மழை நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னையில் இன்று பலத்த மழை: நாளையும் நீடிக்குமாம்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari