தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நாகை மாவட்டத்தை சேர்ந்த 2000 மீனவர்கள் விசைப்படகுடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கிளம்பியுள்ளனர்.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த 61 நாள் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவது என்பது குறிப்பிடத்தக்கது.