நாடாளுமன்ற 17 ஆவது கூட்டத்தின் தொடக்கத்தில் முதல் விவாதமாக சபரிமலை புனிதத் தன்மை காக்கப்பட வேண்டும் என்று கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் (RSB கட்சி) தாக்கல் செய்திருக்கிறார்! 542 பேர் உள்ள நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு எம்.பி.,யின் தனிநபர் விவாதம் சரித்திரம் ஆகும் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பாஜக.,வினர்!

சபரிமலை விவகாரத்தில் பிரேமசந்திரன் கொண்டு வரும் தனிநபர் விவாதத்துக்கு தாம் ஆதரவளிப்பதாக பாஜக தலைவர் கும்மன்னம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இவர் செய்தி சேனல் ஒன்றில் அளித்த பேட்டியின் போது, சபரிமலை விவகாரத்தில் கொண்டு வரும் இந்த மசோதாவில் அரசியலை தான் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்

பாஜக எடுத்துள்ள நிலையைத்தான் பிரேமசந்திரன் எடுத்துள்ளதாகவும் சபரிமலை விவகாரத்தில் பாஜக இதே நிலையை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் கும்மன்னம் ராஜசேகரன்!

அவர் மேலும் தெரிவித்த போது, சபரிமலையில் கலாசார பாரம்பரிய நடைமுறைகள் காக்கப் பட வேண்டும், சபரிமலை பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாஜக.,! பிரேமச்சந்திரன் எடுத்து வரும் தனிநபர் விவாத மசோதா அதற்கு உதவிகரமாக, சபரிமலை விவகாரத்தில் இருந்து வந்த பண்டைய நடைமுறைகள்  அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதிக்கு முன் இருந்தபடியே தொடர வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதாக அமைகிறது.

இந்த மசோதா 2019 சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் மசோதா என்று அறியப்படுகிறது. இதில் உள்ள உள்ளடக்கம் சபரிமலையில் மேற்கொண்டுவந்த வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது

இளம் பெண்கள் சபரிமலையில் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது! இதுதான் 17ஆவது மக்களவையின் முதல் தனிநபர் கொண்டுவரும் விவாதமாக  இருக்கக் கூடும். கொடிக்குன்னில் சுரேஷ் எம்பியும் கூட காங்கிரஸ் இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...