மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று டெல்லி செல்ல உள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 21 ஆம் தேதி நடக்க உள்ளது.
அதில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்லும் துணை முதல்வர், இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பொறுப்பேற்ற பின்னர், மாநில நிதியமைச்சர்களுடன் நடக்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் போது முக்கிய அமைச்சர்களையும் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.