சென்னையில் பணிபுரியும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு இன்று முதல் ஜூலை 4 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்:
2018-19-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்குரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமோ மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிருக்கு வாகன விலையில் 50% (அ) ரூ.25,000 இவற்றில் எது குறைவோ இத்தொகை மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் Retro – fitted வகையிலான வண்டி வாங்கினால் மட்டுமே கூடுதல் மானியத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.