பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சைதாப்பேட்டை மேற்கு பகுதி. எம்எம்டிஏ காலனி காலனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம் அழகிரி நகர் உள்ளிட்ட சென்னையின் சில முக்கிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளத
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு
எம்.எம்.டி.ஏ.காலனி பகுதி: ஏ- பிளாக் முதல் ஆர் பிளாக், கமலா நேரு நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி ரோடு.
அரும்பாக்கம் பகுதி: மேத்தா நகர், என். எம். ரோடு, எம்.எச். காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ, இந்தியா, வைஷ்ணவ காலேஜ், கோவிந்தன் தெரு, கலெக்ட்ராட் காலனி, அய்யாவோ காலனி, காயத்ரி தேவி, வாரட்டேஸ் ராசத் கார்டன், ஜே டி துரைராஜ் நகர், அசாத்நகர், விஜிஏநகர், எஸ்.பி.ஜ அபிசர்ஸ் காலனி.
அசோக் நகர் ஒரு பகுதி ;- சைதாப்பேட்டை மேற்கு பகுதி: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், பாரி நகர், பள்ளிக்கூட சாலை, அஞ்சுகம் நகர், ஆர்.ஆர்.காலனி, வி.எஸ்.எம். கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை, சைதாப்பேட்டை மேற்கு முழுவதும், 7, 11-வது அவென்யு, எல்.ஐ.சி.காலனி, நாகாத்தம்மன் கோயில் காலனி, அண்ணாமலை செட்டி நகர், கே.வி.காலனி 1 முதல் 5-வது தெரு, போஸ்டல் காலனி 1 முதல் 4-வது தெரு, காமாட்சிபுரம் 2 முதல் 10-வது அவென்யூ வரை, அசோக் நகர் 58 முதல் 64-வது தெரு, நாயக்கமார் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகர் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12-வது அவென்யூ, ராமாபுரம், ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநோயர் கோயில் தெரு, ராமானுஜம் தெரு, பாரதியார் தெரு, மசூதிபாளயம் தனசேகரன் தெரு, விஜிபி சாலை
நெல்சன் மாணிக்கம் ரோடு ;- சூளைமேடு பகுதி: சக்தி நகர், 1 முதல் 5வது தெரு வரை, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2 வது தெரு, நெல்சன் மாணிக்கம் ரோடு, ஈஸ்ட் மற்றம் வெஸ்ட் நமச்சிவாயபுரம், சூளைமேடு ஹைரோடு, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீல கண்டன் தெரு, கான் தெரு.
அழகிரி நகர் பகுதி ;- கோடம்பாக்கம் பகுதி: பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு வரை. அழகிரி நகர் பகுதி: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை பகுதி – ஐஐ , ஐயப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.