தமிழக சட்டப்பேரவை தாமதமாக தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டபேரவை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய கூட்டத்தொடர் தாமதமாக 27ம் தேதி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.