― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மாமன்னர் ராஜராஜன் நினைவிடத்தில் அபிஷேகம் கூட்டுவழிபாடு! இந்து தமிழர் கட்சி இன்று ஏற்பாடு!

மாமன்னர் ராஜராஜன் நினைவிடத்தில் அபிஷேகம் கூட்டுவழிபாடு! இந்து தமிழர் கட்சி இன்று ஏற்பாடு!

- Advertisement -

மாமன்னர் ராஜராஜன் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை இன்று அபிஷேகம் ஆராதனை கூட்டு வழிபாடு ஆகியவை நடத்தப் படவுள்ளதாக இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார்  சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது…

தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது. பொதுமக்கள் முன்னாள் முதல்வர் கொண்டு வந்த மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.

தேசிய நதிகளை இணைக்க
வேண்டும் என்கின்ற பாரதப் பிரதமரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

கோதாவரி காவேரி இணைக்க அரசு எடுத்து வரும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தோம்.

தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் இது வரை ஆட்சி செய்த கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளே ஓடக்கூடிய நதிகளை இணைப்பதற்கு  எந்த திட்டங்களையும் இதுவரை போடவில்லை.

ஆகவே தமிழக அரசு “தமிழக நதிகள் இணைப்பு திட்டத்தை” ஆய்வு செய்து நதிகளை இணைத்து தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை வரும் காலங்களில் தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை யிலான வெற்றி பெற்ற உறுப்பினர்கள்  தமிழ் வாழ்க என்று சொல்லி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் பெரியார் வாழ்க என்று சொல்வது எதிர்ப்பிற்குரியது மட்டுமல்ல; நகைப்பிற்குரியது.
முன்னுக்குப் பின் முரணானது.

காரணம் ஈவேரா தமிழன் காட்டுமிராண்டி தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி , வீட்டிலும் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும்
என்று சொல்லி ஆங்கிலேயனுக்கு அடிவருடியாக இருந்தவர்.

இவர் பெயரை சொல்லி பதவி ஏற்றது பாராளுமன்ற வரலாற்றில் ஒரு கரும்புள்ளி வெட்கக்கேடு.

பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீ ராம் ராம் என்று சொல்லி பதவியேற்று இருக்கிறார்களே என்கிறார்கள்

இந்த நாட்டிலே அல்லாஹு அக்பர் என்று சொல்லிட பாராளுமன்றத்தில் உரிமை இருக்கும்போது , ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லக்கூடாதா?

திராவிட முன்னேற்றக் கழகமும் நீதிக்கட்சியும் வந்த பிறகுதான் தமிழகத்தில் தமிழ் இருக்கிறது. தமிழ் வாழ்கிறது என்பதுபோலவும், இவர்கள் தான் தமிழ் மொழி காவலர்கள் என்பது போல நாடகமாடுகிறார்கள்.

ஆன்மீக தமிழ் தான் ஆழ்வார்கள் தமிழ் தான் நாயன்மார்கள்
தமிழ் தான் இந்த மண்ணிலே இன்றளவும் தமிழை காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

அண்ணாதுரை தமிழும் கருணாநிதி தமிழும் இவர்கள் பிழைப்புக்காக பயன்பட்டதே ஒழிய , இவர்களால் தமிழ் வாழவில்லை.

தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டு பதவி ஏற்பதால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது.

தமிழ் வாழ்க என்று விளம்பரப் பலகை வைத்தால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது. பதவி ஏற்றவர்களை தமிழ் தாய் வாழ்த்து மனப்பாடமாக பாடச் சொல்லுங்கள். பத்து திருக்குறளை மனப்பாடமாக சொல்லச் சொல்லுங்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தவர்கள் உண்மையிலேயே தமிழை வளர்ப்பவர்களாக இருந்தால் சமத்துவபுரங்களில் தமிழை இழிவு படுத்திய ஈவேரா சிலையை ஏன் வைக்க வேண்டும்? இதற்கு பதிலாக வான்மறை வள்ளுவம் தந்த திருவள்ளுவர் சிலை வைத்து இருக்கலாமே!

சமத்துவ புரட்சியாளர் சுவாமி சகஜானந்தர் சிலைகளை வைத்திருக் கலாமே!

இவர்கள் சிலையை ஏன் வைக்க வில்லை?

காவிரி நதி நீர் தமிழகத்திற்கு கிடைத்திட 37 எம்பிகளும் உடனடியாக  கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேசி அன்னை சோனியாவிடம் பேசி பெற்றுத்தர முயற்சிக்கலாம்.

மண்ணாண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சாதி ரீதியாக விமர்சனம் செய்த இயக்குனர் ரஞ்சித் பேச்சு வன்மையான கண்டனத்திற்கு உரியது.

தமிழை காப்போம் என்று சொல்லக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் ரஞ்சித் பேசிய பேச்சிற்கு என்ன கண்டனம் தெரிவித்தார்கள்?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறக்கூடிய ஆனித்திருமஞ்சன பெருவிழாவிற்கு இலங்கையிலிருந்து இந்து சைவர்கள் சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வதற்கு வசதியாக குறைந்த கட்டணத்தில் கப்பல் போக்குவரத்து சேவைகள் தொடங்குவதற்கு இந்திய இலங்கை அரசுகள் முயற்சி எடுத்து இந்த ஆண்டாவது நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கும்படி இருநாட்டு அரசுகளையும் , தமிழக அரசையும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்கள் நினைவிடம் கட்டுவதற்கு பல கோடிகள் ஒதுக்கீடு செய்த தமிழக அரசு மாமன்னர் ராஜராஜ சோழன் சமாதி இருக்கக் கூடிய உடையாளூரில் பிரம்மாண்டமான அளவில் நினைவிடம் எழுப்ப வேண்டும்.

மேலும் அரசு விழாவை ஆன்மீக விழாவாக உடையாளூரில் கொண்டாட வேண்டும் .இதற்கான முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் ..

21.06.2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு உடையாளூர் ராஜராஜசோழன் நினைவிடத்தில் அபிஷேகம் ஆராதனை, கூட்டு வழிபாடு, சிவ புராணம் பாராயணம்
இந்து தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறும்.

இதில்அனைத்து சிவனடியார் களையும் தமிழ் மீது பற்று கொண்ட அன்பர்களையும் அன்போடு அழைக்கின்றோம்… என்று கூறி உள்ளார்.

1 COMMENT

  1. பலரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அரபி மொழியில் அல்லாஹ் என்ற சொல் உருவமில்லாத தேவைகள் இல்லாத ஏக இறைவனைக் குறிக்கும். அல்லாஹு அக்பர் என்றால் இறைவன் பெரியவன் என்று தான் அர்த்தமே தவிர அது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல. இஸ்லாமியர்களே ஒத்துக்கொள்வது போல, திருக்குரான் என்ற திருமறை நூல் மற்றும் இறுதி நபி மொத்த உலகுக்கும் இறைவனால் அளிக்கப்பட கொடை. அதுபோலத்தான், வடஇந்திய நாட்டில் ஜெய் ஸ்ரீராம் என்ற சொல்லும். ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது ராம்ராம் என்றோ ஜெய் ஸ்ரீராம் என்றோ சொல்லிக்கொள்வார்கள். இறந்தவர்களை சுமந்துசெல்லும் போதும் இறந்த உடலை காண நேரும்போதும் கூட அவ்வாறு சொல்வது வழக்கம். இதில் ஜாதி மதம் மொழி பேதம் இல்லை. இது இங்குள்ள திராவிடம் பேசும் நமது அரசியல் வாதிகளுக்கு தெரியாது. அதனால் தான், அரசியல் பேசும் இவர்கள் பாராளுமன்றம் போய் தேவையில்லாமல் தமிழ் வாழ்க, (தமிழை இழிவுபடுத்திய) பெரியார் வாழ்க என்று கூவி விட்டனர். அல்லாஹு அக்பர் என்றாலோ ஜெய் ஸ்ரீராம் என்றாலோ தவறே இல்லை. ஓர் இஸ்லாமியர் அல்லாஹு அக்பர் அல்லது அஸ்ஸலாமு அலைக்கும் (‘சமாதானம் உண்டாகட்டும்’ என்று அர்த்தம்) என்று கூறுவார். கிறிஸ்தவர் கர்த்தருக்கு ஸ்தோத்ரம் என்பார்.அது இயல்பு. மதத்துக்கு அப்பாற்பட்டது. அதில் அரசியல் கலப்பும் இல்லை. இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? இந்த மத, ஜாதி, இன, மொழி துவேஷமும் வேற்றுமையும் என்று ஒழியப்போகிறது? அரசியல் வாதிகள் இவற்றை வைத்து தான் தங்கள் பிழைப்பை ஒட்டுகிறார்களே தவிர உருப்படியாக மத நல்லிணக்கம் மற்றும் அமைதியான சூழ்நிலையுள்ள நாட்டை உருவாக்கி முன்னேற்றி செல்ல எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version