இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது உண்மை என்றாலும், தனிப்பெரும்பான்மையை விட 12 உறுப்பினர்களே அக்கட்சிக்கு அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, சட்டமன்ற உறுப்பினர்களை எங்கும் அலைபாய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் திமுகவை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலும் அக்கட்சிக்கு உருவாகி இருப்பதாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசு பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த விளக்கத்தில், திமுகவுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனக் குறிப்பட்டது தொடர்பான கேள்விக்கும் கருணாநிதி பதிலளித்துள்ளார். அதன்படி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஜெயலலிதாவுடன் மட்டுமல்ல யாருடனும் திமுக இணைந்து செயல்படத் தயாராகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
[wp_ad_camp_4]