பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வைத்திருந்த பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற வாசகம் பதித்த பேனரால் இரு நாட்டு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீச் 36-வது லீக் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹமத் ஷா, கேப்டன் நைப் களமிறங்கினர். கேப்டன் நைப் 15 ரன்களிலும் அடுத்த வந்த ஹஷ்மதுல்லா ஷாஹிடி டக் அவுட்டாகி வெளியேறினர்.
ஆப்கான் அணியின் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் அந்த அணி ரன்குவிக்க முடியாமல் திணறியது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அஃப்ரிடி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜமான் டக்அவுட்டாகி ஆரம்பமே அதிர்ச்சியளித்தார். அவரை அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
பாகிஸ்தான் அணி 45 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வெற்றி பெற 30 பந்துகளில் 48 ரன்கள் எடுக்க வேண்டும். ஆப்கான் வெற்றி பெற 4 விக்கெட்களை வீழ்த்த வேண்டுமென்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹமத் ஷா, கேப்டன் நைப் களமிறங்கினர். கேப்டன் நைப் 15 ரன்களிலும் அடுத்த வந்த ஹஷ்மதுல்லா ஷாஹிடி டக் அவுட்டாகி வெளியேறினர்.
ஆப்கான் அணியின் பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் அந்த அணி ரன்குவிக்க முடியாமல் திணறியது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அஃப்ரிடி ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜமான் டக்அவுட்டாகி ஆரம்பமே அதிர்ச்சியளித்தார். அவரை அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.