ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வகைகளை வீட்டீற்கு பெறுவது என்பது தற்பொழுது எங்கும் நடைபெறும் ஒரு வாடிக்கையான விஷயம்.

இந்நிலையில் சென்னை வடபழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டார்.

ஆன்லைனில் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவர் ஆன்லைனில் ரூ.76 பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த நிறுவனம் அவரது ஆர்டரை கேன்சல் செய்துவிட்டது. ஆனால் ரூ.76 திரும்ப அவரது வங்கிக்கணக்குக்கு வரவு வரவில்லை.

இதனால் அந்த கல்லூரி மாணவி அந்நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில் கண்டுபிடித்து அந்த எண்ணுக்கு தொலைபேசி செய்துள்ளார்.

 

 

 

அப்பொழுது எதிர்முனையில் இருந்தவர் ரூ.76 என்பது சிறிய தொகையாக இருப்பதால் அனுப்ப முடியாது என்றும் ரூ.5000 அனுப்பினால் மொத்தமாக ரூ.5076 அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ரூ.5000 ஆன்லைன் மூலம் எதிர்முனையாளர் கூறிய வங்கிக்கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனாலும் கல்லூரி மாணவிக்கு தனது வங்கிக்கணக்கில் பணம் வந்துசேரவில்லை.

இதனால் மீண்டும் அதே எண்ணுடன் தொடர்பு கொள்ள, தான் ஒரு ஓடிபி அனுப்புவதாகவும் அந்த ஓடிபியை கூறினால் உடனே பணம் வர ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணையும் கல்லூரி மாணவி கூறியுள்ளார்.

இருப்பினும் பணம் வராததால் மீண்டும் மீண்டும் வந்த ஓடிபியை அந்த நபரிடம் மாணவி கூறியுள்ளார். இதேபோல் எட்டுமுறை அவர் ஓடிபியை கூற ஒவ்வொரு முறையும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.5000 எடுக்கப்பட்டு மொத்தம் ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் தான் அந்த எண் போலியானது என அந்த கல்லூரி மாணவிக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் வடபழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கூகுளில் இருக்கும் போலியான கஸ்டமர்கேர் எண்ணை உபயோகிக்கக் கூடாது என்றும், நமது மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் அனைவரும் அறியப்படவேண்டிய ஒன்றாகும்.

ஒரு பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ரூ.40 ஆயிரத்தை இழந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...