வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகளை தமிழகம் கொண்டுவர, நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது என்று பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சிலைகளை மீட்டு எடுத்துவருவது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, விரைவில் நிதி ஒதுக்கப்பட்டதும், சிலைகள் தமிழகம் கொண்டுவரப்படும். திருச்சி ராணி மங்கம்மாள் அருங்காட்சியகத்தில் இருந்த 31 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நேபாள எல்லையில் குற்றவாளி கைது செய்யப்பட்டனர். கடந்த 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், உத்தரபிரதேச மாநிலம் சோனாலியில் குற்றவாளி ராம்குமாரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்