நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பை போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் தோனியை, மார்டின் குப்தில் ரன் அவுட் செய்தார் . அதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை. தோனி இறுதிவரை களத்தில் இருந்திருந்தால் இந்திய அணியை வெற்றி பெற செய்திருப்பார் என எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர். குப்தில் செய்த ரன் அவுட் இந்தியா தோல்வியடைந்தது.
தோனியின் ரன் அவுட் குறித்து பேசிய குப்தில், “பந்து என்னிடம் வரும் என நான் நினைக்கவில்லை. என்னை நோக்கி வந்த பந்தினை முடிந்தவரை வேகமாக பிடித்தேன். பந்தினை பிடித்த உடனே நேராக ஸ்டம்பினை நோக்கி வீசினேன். அதிர்ஷ்டவசமாக அது நேராக சென்று ஸ்டம்பில் அடித்துவிட்டது. தோனி ஆட்டமிழந்தது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்று தெரிவித்துள்ளார்.