கோயம்புத்தூரில் விதிமீறல் சம்பவங்களை படம் பிடிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஆடையில் பொருத்தக்கூடிய கேமராகள் வழங்கப்பட்டன.
போக்குவரத்து காவலர்களுக்கு கேமரா வழங்கும் விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் ஆடையில் பொருத்தக்கூடிய 70 கேமராக்கள் வழங்கப்பட்டன. இந்த கேமராக்கள் மூலம் விதிமுறை மீறல்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை பிடித்து, காட்சிகளை உனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.