உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பிரபல வணிக இணையதளமான புளூபெர்க் (bloomberg) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். லூயி விட்டான் நிறுவன அதிபர் அர்னால்ட் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 13-வது இடத்திலும், அசிம் பிரேம்ஜி 48-வது இடத்திலும் உள்ளனர். சிவ் நாடார் 92-வது இடத்திலும், உதய் கோடாக் 96-வது இடத்திலும் உள்ளனர்.
பணக்கார பெண்கள் பட்டியலில், எல் ஓரல் நிறுவனத்தின் லிலைனே பெடீன்கோர்ட் 10-வது இடத்தில உள்ளார்.