காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்து கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைபவம் நடைப்பெற்று வருகின்றது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை இந்த வைபவம் நடக்கிறது.
தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் லட்சக்கணக்கானோர் தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வார நாளான இன்று சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பலியாகி உள்ளனர்.
கூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறலில் மயங்கிய ஆந்திராவை சேர்ந்த நாராயணி, சென்னையை சேர்ந்த கங்காலட்சுமி, நடராஜன் ஆகிய மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிழந்தனர்.
இது போன்ற கூட்ட நெரிசலால அத்தி வரதரை தரிசிக்க செல்லும் பக்தர்கள் சற்று அச்சமடைந்துள்ளனர்.