நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
மேலும், கோதாவரி – காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, நன்னீர் தேவையை பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.