தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி கொண்டாப்டபட உள்ளது. இந்த விழா குறித்து பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகத்தில் இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் 1.50 லட்சம் இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 1008 சிலை வைக்கப்பட உள்ளது. இதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்காமல் எளிய மக்களும் விழாவை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இலவசமாக பந்தல் அமைத்து தர வேண்டும். மின்சாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.