தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
கடந்த 19-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 10 ரன்னில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
2-வது போட்டியில் காரைக்குடி காளை சூப்பர் ஓவரில் திருச்சி வாரியர்சையும், 3-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான டூட்டி பேட்ரியாட்சையும் வீழ்த்தின.
நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் கோவை கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை தோற்கடித்தது.
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 6-வது ‘லீக்’ ஆட்டம் இன்று நடக்கிறது. நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.