ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா 2ஆம் பருவ சீசனுக்கு தயாராகி வரும் நிலையில், மலர் நாற்றுகள் நடும் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டியில் ஆண்டு தோறும் ஏப்ரல் – மே மாதங்களில் முதல் பருவ சீசனும், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் 2ஆம் பருவ சீசனும் நடைபெறும்.
இந்நிலையில் 2ஆம் பருவ சீசனில் சுற்றுலா பயணிகளை கவர, 3 லட்சம் மலர் நாற்றுகளை மலர் பாத்திகளில் நடும் பணியும், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் வெளி நாட்டு மலர்கள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது.
கண்ணாடி மாளிகையில் ஐந்தாயிரம் மலர் தொட்டிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது