23/09/2019 1:24 PM

கழிவறையும் ஒரு சமையலறை ! சொல்கிறார் ம.பி. அமைச்சர் !
மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டம், கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் கழிவறை மேல் வைக்கப்படுவதாகவும், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளார்.வீட்டில் குளியலறையுடன் கழிவறை இருப்பதால் உறவினர்கள் தங்களது வீட்டில் சாப்பிட மறுப்பார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.கழிவறைக்கும் சமைக்கும் பகுதிக்கும் இடையே ஒரு தடுப்பு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிய வேண்டும். ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவரது வீடுகளிலும் குளியலறையுடன் கூடிய கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘குளியலறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் நமது வீடுகளிலும் பாத்திரங்கள் வைத்திருக்கிறோம். பயன்படுத்தப்படாத பாத்திரங்களை அடுக்கி வைக்கிறோம்.  இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.அந்த அங்கன்வாடி மையத்தை தன்னார்வ அமைப்பு பராமரித்து வருகிறது. அங்கு தான் கழிவறை தற்காலிக சமையலறையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அங்கன்வாடி மையத்தின் அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி தேவேந்திர சுந்தரியால் தெரிவித்தார்.Recent Articles

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

Related Stories