23/09/2019 2:50 PM

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு
அயோத்யா வழக்கில் சுமூக தீர்வு காண, மத்தியஸ்தக் குழு ஒன்றை அமைத்திருந்தது உச்ச நீதிமன்றம். அந்தக் குழுவிடம், வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். மேலும், என்ன நிலைமையில் அவர்களது பணி இருக்கிறது என்பது குறித்து அறிக்கை கேட்டுள்ளது நீதிமன்றம்.

மேலும், மத்தியஸ்தக் குழு, பிரச்னையை தீர்க்க முடியாத பட்சத்தில், வழக்கின் விசாரணையை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

அயோத்யா வழக்கு, இதற்கு முன்னர் கடந்த மே 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திஸ்தக் குழுவுக்கு, பிரச்னையை சுமூகமாக தீர்க்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“மத்தியஸ்தக் குழுத் தலைவர், அவர்களது பணி குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடுகிறோம். இந்த அறிக்கையானது அடுத்த வாரத்துக்குள் சமர்பிக்கப்பட வேண்டும். அது குறித்து அடுத்த வாரமே நாங்கள் முடிவெடுப்போம். ஒரு வேளை, மத்தியஸ்தக் குழு, பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காணப்பட முடியாது என்று சொல்லுமேயானால், நாங்கள் இந்த வழக்கை மீண்டும் ஜூலை 25 ஆம் தேதி முதல் விசாரணை செய்வோம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்யா. இங்குள்ள ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

இதன் முடிவில் சமரசக் குழு அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.Recent Articles

அரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

Related Stories