“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

1507603_10202994818654217_4035239553088867808_n

“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

(மலைவாசிகள் கொடுத்த மகத்தான காணிக்கை)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சதாரா அருகிலுள்ள ஸஜ்ஜன் கட் என்ற மலையில்,
சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் கோவில் இருக்கிறது.
செங்குத்தான மலையில் சிரமப்பட்டு ஏறிச்
சென்றார்கள், பெரியவாள்.

அந்த மலையில்,’அய்யாபுவா’ ‘அன்னாபுவா’ என்ற
இனங்களைச் சேர்ந்த மலைவாசிகள் வாழ்ந்து
வருகிறார்கள்.

மலை ஏறி வந்திருக்கும் மகானுக்கு காணிக்கை
செலுத்த வேண்டுமே? காசு – பணம் ஏது?.

செழுமையான வாழைத்தோட்டங்கள் நிறைந்த மலை.
அவர்கள் உணவும் வாழையை மூலப்பொருளாகக்
கொண்டது தான்.

காய்ந்து போன வாழைக்காய்களின் தோலை
நீக்கிவிட்டு, உட்பகுதியை மாவாகச் செய்வார்கள்.

அந்த வாழைக்காய் மாவை, பெரியவாளுக்கு
சமர்ப்பித்தார்கள் – சங்கோஜத்துடன்.

“இது என்ன மாவு?”

“வாழைக்காய் மாவு…”

“இதை எப்படிச் சாப்பிடறது?”

“இட்லி,தோசை பண்ணலாம்…”

சிறு புன்னகை

” ஓ! வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

 
“ஆமா, சாமி…”
 
பெரியவாள், கள்ளங்கபடமற்ற அந்த மக்களின் ஆனந்த முகங்களைப் பார்த்து பெரிதும் சந்தோஷப்பட்டார்கள்.

அன்று முதல், பெரியவாள் பிக்ஷைப் பக்குவத்தில்,
வாழைக்காய் மாவு நீங்காத இடத்தைப் பெற்று விட்டது தானியங்களான உணவை முற்றிலுமாக நிறுத்தி விட்டிருந்த பெரியவாளுக்கு வாழைக்காய் மாவு ரொம்பவும் கைகொடுத்தது.

அய்யாபுவாவும்,அன்னாபுவாவும் நம்மைக் காட்டிலும்
மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆம் அவர்கள் மலைச் சிகரங்களில் அல்லவா வாழ்கிறார்கள்.