ஆவணி அவிட்டம் 18-08-2016 யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.

18698_10153209347029244_3030028360467212073_n

ஆவணி அவிட்டம் 18-08-2016
யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.
.(ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!)
 
(மகா பெரியவாளின் சில முக்ய கருத்துக்கள்)
 
தெய்வத்தின் குரலிலும்,வலையிலும்-குறிப்பு
எடுக்கப்பட்டது-வரகூரான்.
 
 
ஆவணி அவிட்டத்தில்தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு,
 
ஆவணி அவிட்ட உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று
 
வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.
 
 
 
இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை
 
நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய
 
வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
 
 
வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து
 
முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக “காமோகார்ஷீத்” ஜபம் சொல்லப்பட்டு
 
இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து
 
விட்டது. ‘காமோ கார்ஷீத்’ ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று
 
ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.
 
 
அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை
 
மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்
 
அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்
 
கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது
 
எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே
 
முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்
 
கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.
 
 
ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை
 
ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு “காமோர்கார்ஷீத்” ஜபம் செய்வது
 
போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்
 
வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்
 
ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து
 
இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்
 
காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு
 
இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்,
 
காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி
 
இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ
 
மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

 
யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்
(பலருக்கும் தெரியாத விஷயம்)
 
 
.மஹேஸ்வர ஸூத்ரம்:- ஆவணி அவிட்ட வேதாரம்பம்
 
ம்ஹேஸ்வர ஸூத்ரம்: பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா- பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்! நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது!
 
 
இந்த பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா. மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால, அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.
 
 
அ இ உண்
 
ருலுக்
 
ஏ ஒங்
 
ஐ ஔச்
 
ஹயவரட்
 
லண்
 
ஞமங் ண நம்
 
ஜ ப ஞ்
 
க ட த ஷ்
 
ஜப க ட த ச
 
க ப ச ட த சடதவ்
 
கபய்
 
சஷஸர்
 
ஹல்
 
ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயேசும்மா ஒப்பிச்சிருப்பேள்!
பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!