“நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்? கணக்குப் போடு”-பெரியவா.

10482143_599228513527816_46027082804070919_n

“நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்?
கணக்குப் போடு”-பெரியவா.

(ஒரு பஞ்சாங்க சர்ச்சை)
சொன்னவர்-.நரசிம்மன்.(ஸ்ரீமடம் பஞ்சாங்க கணிதக்ஞர்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சிபுரம் அருகில் ஓரிருக்கை கிராமத்தில்
பெரியவாள் சந்நிதியில் பஞ்சாங்க மீட்டிங் ஒன்று
நடந்தது.கிரகண விஷயமாக சர்ச்சை

 மாலை 4-30 மணி.

வழக்கம்போல் அப்பாவோடு நானும் சென்று
சர்ச்சையில் கலந்துகொண்டேன்.அந்த வருஷம்
சூரிய கிரகணம் தெரியாது என்று ஸ்ரீ மடத்துப்
பஞ்சாங்கத்தில் போட்டிருந்தோம். மற்றப்
பஞ்சாங்கக்காரர்கள் ‘தெரியும்’ என்று
போட்டிருந்தார்கள்.

“கிருஷ்ண ஐயங்காரே! ஜோஸ்யரே! குப்புஸ்வாமி
சிஷ்யரே!” என்றெல்லாம் பலவாறு பெரியவாள்
அப்பாவை அழைப்பார்கள்.

“நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்?
கணக்குப் போடு” என்று அப்பாவைக் கேட்டார்கள்.
அப்போது கம்ப்யூட்டர் வந்த சமயம்,மற்றவர்கள்
கம்ப்யூட்டரில் பார்த்து ‘கிரகணம் தெரியும்’என்றார்கள்.

நாங்கள் கணக்குப் போட்டு, “ஒரு நிமிஷம்தான்
கிரகணம். அது அநுஷ்டானத்துக்கும் போதாது;
கண்ணுக்கும் தெரியாது. அதனால் கிரகணம்
கிடையாது” என்று தெரிவித்தோம். அதேபோல
கிரகணம் நம் நாட்டில் தெரியவில்லை.

மகாபெரியவாளுக்கு, ஜோஸ்யர்களிடம் பரிவும் பாசமும்
உண்டு. ‘தைவக்ஞர்கள்’ என்று கௌரவிப்பார்கள்.

நாள்தோறும் பஞ்சாங்க படனத்தை வற்புறுத்துவார்கள்.
கிரகங்களின் கதியை அறிந்துகொள்வது
வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பார்கள்.