Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் இன்று முதல்… மகாளய பட்சம்! மூதாதையர் ஆசிபெற முழுமையான நாட்கள்!

இன்று முதல்… மகாளய பட்சம்! மூதாதையர் ஆசிபெற முழுமையான நாட்கள்!

இன்று முதல் ஆரம்பமாகிறது… மஹாளய பட்சம் :- 2019 செப்.14 ஆவணி மாதம் 28ம் தேதி காலை 10-39 மணி பிரதமை திதி ஆரம்பம். இது முதல் செப்.28 புரட்டாசி மாதம் 11ஆம் தேதி நள்ளிரவு (செப்.29 அதிகாலை) 12 – 44 மணி அமாவாசை திதி முடியும் வரை வரை 15 தினங்கள் மஹாளய பட்ச நாட்களதான்.

மஹாளய அமாவாசை :- செப். 27 புரட்டாசி மாதம் 10ம் தேதி நள்ளிரவு (செப்.28 அதிகாலை) 3 -06 மணி முதல் செப்.28 புரட்டாசி மாதம் 11ம் தேதி நள்ளிரவு (செப்.29 அதிகாலை) 12 – 44 மணி வரை மஹாளய அமாவாசை.

பித்ரு லோகத்தில் இருக்கும், நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம், அமாவாசை படையல்களை நமது முன்னோர்கள் நேரில் வந்து பெற இயலாது. பித்ரு லோகத்தை விட்டு வெளியே வர நமது முன்னோர்களுக்கு அனுமதி இல்லை. நாம் செய்யும் தர்ப்பணம், அமாவாசை படையல்களை பித்ரு தேவன் பெற்றுக்கொண்டு அதை நமது முன்னோர்களிடம் சேர்ப்பார்.

மஹாளய அமாவாசை உட்பட மஹாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்க்கோ அல்லது அவர்கள் இஷ்டப்படும் இடத்திற்கோ சென்று வர அனுமதி உண்டு.

இந்த 15 நாட்களும் நமது முன்னோர்களை நமது வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு விருப்பமானதை படைத்து வழிபட்டால் நமக்கு பித்ரு சாபம் ஏதும் இருந்தால் விலகும். நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், முழு பாதுகாப்பும் கிடைக்கும். நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

முதல்நாள் பிரதமை திதியில் தர்ப்பணம் – பணக்கஷ்டம் தீரும், பணம் வந்து சேரும்.

இரண்டாம் நாள் துவிதியை திதியில் தர்ப்பணம் -ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.

மூன்றாம் நாள் திரிதியை திதியில் தர்ப்பணம் – நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

நான்காம் நாள் சதுர்த்தி திதியில் தர்ப்பணம் – எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.

ஐந்தாம் நாள் அன்று பஞ்சமி திதியில் தர்ப்பணம் – வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

ஆறாம் நாள் அன்று சஷ்டி திதியில் தர்ப்பணம் – பேரும், புகழும் கிடைக்கும்.

ஏழாம் நாள் அன்று சப்தமி திதியில் தர்ப்பணம் – சிறந்த பதவிகளை அடையலாம்.

எட்டாம் நாள் அன்று அஷ்டமி திதியில் தர்ப்பணம் – அறிவாற்றல் பெருகும்.

ஒன்பதாம் நாள் அன்று நவமி திதியில் தர்ப்பணம் – திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள்.

பத்தாம் நாள் அன்று தசமி திதியில் தர்ப்பணம் – நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பதினொன்றாம் நாள் அன்று ஏகாதசி திதியில் தர்ப்பணம் – படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.

பனிரெண்டாம் நாள் அன்று துவாதசி திதியில் தர்ப்பணம் – தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

பதிமூன்றாம் நாள் அன்று திரயோதசி திதியில் தர்ப்பணம் – செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

பதினான்காம் நாள் அன்று சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் – பாவங்கள் நீங்கும். வருங்கால தலைமுறைக்கு நன்மைகள் உண்டாகும்.

பதினைந்தாம் நாள் அன்று மகாளய அமாவாசை தர்ப்பணம் – அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version