
ரோஸ் டைமண்ட்ஸ்
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு கப்,
ரோஜா இதழ்கள் – கால் கப்,
ரோஸ் எசன்ஸ் – கால் டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – பொரிக்க.
செய்முறை:
கோதுமை மாவுடன் சோள மாவு, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவுபோல கெட்டியாகப் பிசைந்து, உருட்டி, சிறு சிறு டைமண்ட் வடிவ துண்டுகளாக நறுக்கி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தட்டில் எடுத்து வைக்கவும்.
எண்ணெயைச் சூடாக்கி துண்டுகளை மொறுமொறுப் பாக பொரிக்கவும். அகல மான பாத்திரத்தில் சர்க் கரை, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு பிசுக்கு பதம் வந்ததும் ரோஜா இதழ்களைச் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இரட்டைக் கம்பி பதம் வந்ததும் இறக்கிவைத்து, ரோஜா எசன்ஸ் சேர்க்கவும். பொரித்த கோதுமைத் துண்டுகளை அதில் சேர்த்துப் புரட்டி எடுத்து, தட்டில் கொட்டி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.