கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. அந்த தேர்தல் முடிவு தந்த உற்சாகம் கமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி சிந்திக்க வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி அண்மையில் முடிந்ததை அடுத்து மீண்டு கட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் கமல். அந்த வகையில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகளை கடந்த வாரம் நியமித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், இப்போதே அதற்கான வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டார் கமல். சத்தமில்லாமல் இதற்காக பிரஷாந்த் கிஷோர் தரப்புடன் பேசி வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்றால் சில அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, அதனை அணியாக மாற்ற வேண்டும் என கமலுக்கு பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கினாராம். மேலும், டிடிவி தினகரன், போன்ற தலைவர்களை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கமலிடம் அவர் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான யாருடனும் தாம் சேர்ந்து செயல்படமாட்டேன் என்றும், ஊழல் கறை படிந்தவர்களுடன் இணைந்து தான் வெற்றிபெற வேண்டும் என்ற நிலை தமக்கு இல்லை எனவும் கமல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.
நடப்பு விவகாரம் பற்றி அறியாமல் கமல் இப்படி பிடிவாதம் பிடிப்பது பிரஷாந்த் கிஷோரை யோசிக்க வைத்துள்ளதாம். இதனால் தொடர்ந்து அவர் கமல் கட்சிக்கு ஆலோசனைகள் வழங்குவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இநà¯à®¤ விஷயதà¯à®¤à®¿à®²à¯ பிரசாநà¯à®¤à®¿à®©à¯ கரà¯à®¤à¯à®¤à¯ˆ கமல௠நிராகரிதà¯à®¤à®¤à¯ மிக மிக சரி.