
தந்தையை போலிசில் ஒப்படைத்த 5 வயது சிறுவன்.
அமெரிக்காவில் ஒரு சிறுவன் தனக்கு தெரியாமலேயே ட்ரக்ஸ் சப்ளை செய்யும் தந்தையை போலீசாரிடம் ஒப்படைத்தான்.
5 வயது சிறுவன் வியாழன் அன்று பள்ளிக்கு ஒரு பையை எடுத்து வந்துள்ளான். அந்த பையில் ஒரு பவுடர் இருக்கிறது என்றும் அதனைத் தின்றதும் தான் ஸ்பைடர்மேன் போல் மாறிவிட்டதாகவும் தன் சக மாணவர்களிடம் கூறினான்.
அந்த பையை பரிசோதித்த ஆசிரியர் அதில் டிரக்ஸ் இருப்பதை கவனித்தார். உடனே போலீசில் புகார் செய்தார். பள்ளிக்கு வந்த போலீசார் சிறுவனை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர் .
பின்னர் சிறுவனை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரை பார்த்த சிறுவனின் தாய் கவலை அடைந்தாள். சிறுவனின் தந்தை பென்னீ கார்சியோ (29) படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அதே அறையில் போலீசாருக்கு சுமார் 200 பைகள் நிறைய ட்ரக்ஸ் அகப்பட்டன. உடனே பென்னீ கார்சியோவை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.