spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பொய்யே... உன் பெயர் தான் திராவிடர் கழகமோ?!

பொய்யே… உன் பெயர் தான் திராவிடர் கழகமோ?!

- Advertisement -

24/01/1971 அன்று.. இரண்டு நாட்கள் ஈவேரா சேலத்தில் மாநாடு நடந்தினார். அதில்.. செருப்படி விழாவும் நடந்தது. பச்சை முத்து நெருப்பு வைக்க செருப்பு மாலையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட ராமர் உருவம்.. திகு..திகு வென பற்றி எரிந்தது. இதை வேறு யாரும் சொல்லவில்லை. ஈவேரா கிழத்தின் ஆதாரப்பூர்வமான “விடுதலை” நாளிதழ் கூறுவதாக ரங்கராஜ் பாண்டே தன் சாணக்கியாவில் ஆதாரத்துடன் விளக்கிக் காட்டி.. பேசியிருக்கிறார்.

அந்த மாநாட்டில் 10 தீர்மானங்கள் போடப்படுகின்றன..!

மத உணர்ச்சியை புண்படுத்தும் இ.பி.கோ சட்டப்பிரிவை எடுத்துவிட வேண்டும். (அதாவது இவர் மத உணர்வைப் புண்படுத்தினால் அதனை தண்டிக்கும் சட்டத்தை எடுக்க வேண்டுமாம்)

கடவுள் – மதத்திற்கு அரசு பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.

ஒருவன் மனைவி… வேறொருவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது.

கடவுள், மதம், மொழி, ஜாதி, தேசம் ஆகியவற்றில் பற்று கூடாது. (அதாவது தேசப் பற்றே கூடாதாம்)

சுப்ரீம் கோர்டை எடுத்துவிட வேண்டும்.

பார்ப்பனர்களை பிராமணர்கள் என்று சொல்லக் கூடாது.

பார்ப்பனப் பத்திரிகைகளைத் தமிழர்கள் கண்டிப்பாக பகிஷ்கரிக்க வேண்டும். (ஒட்டு மொத்தமாக ஒதுக்க வேண்டும்)

இந்து மதம் என்பது ஒரு மதமே இல்லை.

நாமும் இந்துக்களே அல்ல. வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று அனைவரும் கூற வேண்டும்.

ஜாதியை ஒழிப்பது என்றால் பார்பானை துவேஷிக்க வேண்டும். (திட்டித் தீர்க்க வேண்டும்)

ஆதாரம் கேட்டவர்களுக்கு தகுந்த ஆதாரங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

அவதூறான கருத்துக்கள் சொல்லக் கூடாது என்று அதிமுக அமைச்சர் பேசியுள்ளார். வரலாறு தெரியாமல் பேசுவதாக திருமாவளவன் பேசியுள்ளார். துரை முருகன் ஈவேராவைப் பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது வாலும் தெரியாது என்று பேசியுள்ளார்.

சேலத்தில் இந்த சம்பவம் நடந்ததா இல்லையா..?
ராமனுக்கு செருப்பு மாலை போடப்பட்டதா இல்லையா..?
செருப்பால் ராமரை அடித்தது நிஜமா பொய்யா..?
அந்த மாநாடு ஈவேராவால் கூட்டப்பட்டதா இல்லையா..?
அந்த மாநாட்டில் ஈவேரா கலந்து கொண்டாரா இல்லையா..?
இப்படி ஹிந்து மதத்தை இழிவு படுத்திய கிழத்தை “பெரியார்” என்று ஒப்புக் கொள்ள, கொண்டாட மனசாட்சியுள்ளவர்களுக்கு மனம் வருமா..?
எல்லாவற்றிற்கும் மேலாக… இது யோக்யமான சம்பவமா..?
இதன் பின்னரும் இந்த ஈவேரா கிழத்தை புரட்சிகாரன்.. புரட்டாசிக்காரர் என்று எந்த மானமுள்ள மனிதனாவது பேசுவானா..?

இப்போது ஈவேராவை பெரியார் என்றும்.. புரச்சிகளை ஏற்படுத்தியவர் என்றும்.. உளறிக் கொண்டிருந்தவர்கள், இன்னமும் மற்றவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்து ஈவேராவை ஆதரிக்கும் (அதாவது தன்னையே அசிங்கப்படுத்திக் கொள்ளும்) நம்மவர்களும் கூட இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கலாம்.

முழு வீடியோவையும் பார்க்கவும்.

Video Curtesy – Shrijit Sridharan 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe