திருநெல்வேலி – தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 29ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.*
வண்டி எண் 22627/22628 திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி விரைவு ரயில் கோவில்பட்டி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 16191 தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் திண்டுக்கல் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
வண்டி எண் 16192 நாகர்கோயில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவில் – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் பிப்ரவரி 25, 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் சாத்தூர் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
வண்டி எண் 11022 திருநெல்வேலி – தாதர் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56767/56768 தூத்துக்குடி – திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் திங்கட்கிழமை உட்பட தூத்துக்குடி – திருநெல்வேலி நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.