Home Reporters Diary நாக்பூரில் வரலெட்சுமி நோன்பு!

நாக்பூரில் வரலெட்சுமி நோன்பு!

தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் தமிழ் ஒலிக்கும் என்பது போல தமிழர்கள் தங்கள் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். இன்று, நாக்பூரில் வரலட்சுமி நோன்பும் பல நூறு தமிழ்க் குடும்பங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வஸந்தா கிருஷ்ணமூர்த்தி, நாக்பூரில் புகழ்பெற்ற சரஸ்வதி வித்யாலயாவின் ஓய்வுப்பெற்ற ஆசிரியை, தன் இல்லத்தில் 50 வருடமாக வரலெட்சுமி நோன்பு கொண்டாடுவதாக கூறினார்.

மஹாராஷ்டிர பெண்களையும் வரலெட்சுமி அம்மன் தரிசனத்திற்கு அழைப்பதையும் பழக்கமாக வைத்திருப்பதாகக் கூறினார். நாக்பூர் பெண்களும் உற்சாகத்தோடு வரலெட்சுமி நோன்பில் பங்கேற்றனர்.

தேவி பாடல்களை மராட்டியில் அம்பாள் முன் பக்தியுடன் பாடுகின்றனர். பிரசாதமான கொழுக்கட்டை, வடை முதலியவற்றையும் ரசித்து ருசித்து, மகிழ்கின்றனர்.

வர லட்சுமியைப் போற்றி, இவையெல்லாம் வரமாக  அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம்…

  • கடமையுணர்ச்சி வரமாக வேண்டும்,
  • சகிப்புத்தன்மை வரமாக வேண்டும்,
  • செருக்கில்லா அறிவு வரமாக வேண்டும்,
  • ஞாலம் வெல்ல ஞானம் வரமாக வேண்டும்,
  • தன்னம்பிக்கை வரமாக வேண்டும்,
  • தளராத மனம் வரமாக வேண்டும்,
  • நற்குணங்கள் வரமாக வேண்டும்,
  • நல்லாரோக்கியம் வரமாக வேண்டும்,
  • பாரபட்சம் காணாத உறவுகள் வரமாக வேண்டும்,
  • பொறுமை வரமாக வேண்டும்,
  • மதிக்கும் குணம் வரமாக வேண்டும்,
  • மன திருப்தி வரமாக வேண்டும்,
  • மன நிம்மதி வரமாக வேண்டும்,
  • யாவருக்கும் முடிந்தளவு உதவி புரியும் எண்ணம் வரமாக வேண்டும்,
  • வளமான வாழ்வு வரமாக வேண்டும்,
  • வாழ்வியலில் எளிமை வரமாக வேண்டும்,
  • வையம் போற்றும் தொழில்வளம் வரமாக வேண்டும்,
  • வெறுப்பற்ற போக்கு வரமாக வேண்டும்,
  • வரலெட்சுமி தாயே!!

விக்னங்கணங்களைப் போக்கி, 
நல்வாழ்வை வரமாக தா(யே), வரலெட்சுமி தாயே!

– By Jayashree Chari

  • ஜெயஸ்ரீ சாரி (நாக்பூர், மகாராஷ்ட்ரா)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version