ஏப்ரல் 21, 2021, 10:50 காலை புதன்கிழமை
More

  ரக்க்ஷா பந்தன்: சகோதரத்துவத்தை மேம்படுத்தும் மகத்தான திருவிழா!

  Screenshot 2020 0802 212502 - 1

  ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்படும் சகோதர சகோதரிகளுக்கான உறவின் உன்னதத்தை எடுத்துக்கூறும் ஒரு விழா. இந்தியா முழுவதும் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக வட நாடுகளில் இது மிக பிரசித்தமாக கொண்டாடப்படும் ஒன்றாக விளங்குகிறது.

  சகோதரத்துவத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த விழா பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ரக்ஷா பந்தன் கயிற்றை கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

  இதற்காக ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே எல்லா கடைகளிலும் ரக்ஷாபந்தன் கயிறுகள் விற்கப்படுகின்றன. மேலும் அவரவர் தங்கள் கைகளால் செய்த ரக்ஷா பந்தன் கயிறுகளையும் அனுவித்து மகிழ்கிறார்கள். சகோதரர்களின் மேல் வைத்திருக்கும் பாசத்தை பெண்கள் இந்த விழாவின் மூலம் இன்னும் நன்றாக பதிவிடுகிறார்கள் அவர்கள் நலனுக்காக கடவுளிடம் அன்று வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

  இது உடன்பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமல்லாமல் உடன்பிறவா சகோதரர்களுக்கும் பொருந்துகிறது எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து அன்பால் பாசத்தால் சகோதரத்துவத்தால் இணையும் ஒரு ஆண் பெண்ணின் சகோதரத்துவ உறவினை மேம்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இது அமைகிறது.

  ரக்ஷா பந்தன் ஆவணி மாத பௌர்ணமியில் கொண்டாடப்படும் ஒன்று. ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பிணைப்பு மற்றும் பாதுகாக்கும் பந்தம் என்றும் பொருள். இதனை ராக்கி என்றும் அழைக்கிறார்கள்.

  பெண்கள் தங்கள் சகோதரர்கள் அல்லது சகோதரர்களாக நினைக்கும் ஒரு நபருக்கு அவர்கள் கைகளில் மஞ்சள் கயிறு கட்டி இந்த உறவை பலப்படுத்திக் கொள்கிறார்கள்.
  தீய சக்திகள் நோய்கள் தீய விஷயங்கள் இன்னபிற வற்றிலிருந்து அவர்கள் மீண்டு அவர்கள் வாழ்வு நலமாக அமைய இறைவனை பிரார்த்தனை செய்யும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

  Screenshot 2020 0802 212535 - 2

  ராக்கி கட்டியவுடன் சகோதரர்களும் தங்கள் மகிழ்ச்சியை காட்டும் விதமாக தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக சகோதரிகளுக்கு பல மிக சிறப்பான உயர்ந்த பரிசுகளை வழங்கி மகிழ்கிறார்கள்.

  சகோதரர்களுக்காக ஸ்பெஷலாக செய்யப்பட்ட இனிப்புகள் பரிமாறப்படுகிறது. அவர்களுக்கு ஆரத்தி எடுத்து அவர்கள் மூத்தவராக இருந்தால் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள்.

  ரக்ஷா பந்தனை பற்றி பலவித கதைகள் இருந்தாலும் புராணக் கதையும் இதிகாசத்தில் ஒன்றுமான மகாபாரதத்தில் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட காயத்தை தன் துணியைக் கிழித்து திரௌபதி கைகளில் கட்டுவதாக ஒரு நிகழ்ச்சி உண்டு. அந்நிகழ்வின் பலனாக கிருஷ்ணர் அவளுடைய துன்பங்களில் இக்கட்டான தருணங்களில் அவளை பாதுகாக்கும் ஒரு சகோதரனாக அவளுக்கு துணை நிற்கிறார்.

  துரியோதனன் அவையில் ஏற்பட்ட அவமானத்தில் இருந்து அவளைக் காப்பாற்றுவதற்காக அவளுக்கு அபயம் அளிக்கிறார்.
  பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தன் பாலி. பாலி இறைவனிடம் ஒரு வேண்டுகோளை வைத்தான் அது அவனது ராஜ்யத்தை பாதுகாப்பது. பாலியின் வேண்டுகோளுக்கு இரங்கி விஷ்ணுவும் வைகுண்டத்தை விட்டு அவனது ராஜ்யத்தை பாதுகாக்க வந்தார்

  தன் கணவர் வரும்வரை வைகுண்டத்தில் இருக்க விரும்பாத லட்சுமிதேவி பூலோகத்தில் சாதாரண பெண்ணாக அலைந்து திரிந்தார்.

  சாதாரண பெண் உருவத்தில் இருந்த லட்சுமிதேவி ஆவணி பௌவுர்ணமி அன்று பாலியின் கைகளில் ராக்கி கட்டி சகோதரன் ஆக்கிக்கொண்டார். அப்பொழுது அவன் அவளின் உண்மை தன்மையை கேட்டபொழுது தான் லட்சுமி தேவி என்பதை அவனுக்கு காட்டினாள்.

  இந்நிகழ்வு பாலியின் மனதைத் தொட்டதால் இறைவனுக்காக தன் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுக் கொடுத்தான். பாலியின் பக்தியை வெளிப்படுத்துவதற்காக இறைவனும் இதனை நடத்தினார்.

  இறைவன் பாலியிடம் கொண்ட அன்பையும் பாலி இறைவனிடம் கொண்ட பக்தியையும் விளக்கும் விதமாக இந்நாள் பாலி வா என்று மக்களால் கொண்டாடப்படுகிறது.

  அன்னாளில் இருந்தே சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டும் விழா ஆரம்பம் ஆனதாக கூறப்படுகிறது மேலும் போர்க்காலங்களில் போருக்குச் செல்லும் சகோதர்களுக்கு ரக்ஷைஅளிக்கும் விதமாக சகோதரர்களுக்கு கையில் மஞ்சள் கயிற்றைக் கட்டி அவர்களைப் போருக்கு அனுப்புவதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

  கிபி 1303 சித்தூர் கரை (ராஜஸ்தான்) தில்லிஅலாவுதீன் கில்ஜி தாக்க வரும் பொழுது ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக கூறப்படுகிறது.

  மாவீரன் அலெக்சாண்டர் போரஸிடம் வெற்றி கொள்ள முடியாத நிலையில் செல்யூகஸ்நிகேதார் என்ற அலெக்சாண்டரின் தளபதியை அழைத்துக்கொண்டு அலெக்சாண்டரின் மனைவி ரோகஸானா, போரஸ் என்ற புருஷோத்தமன் கைகளில் ராக்கி காட்டுகிறாள். போரஸின் கைகளில் ராக்கி கட்டி தன் கணவனின் உயிரை அவள் சகோதரனிடம் மன்றாடினாள் என்றும் அவள் கட்டிய ராக்கி அவள் கணவனான அலெக்ஸாண்டரின் உயிரை காப்பாற்றியது என்று வரலாறு கூறுகிறது.

  இவ்விழா குடும்ப பாசத்தை வளர்க்கிறது பிணைப்பை ஏற்படுத்துகிறது பலரது குடும்ப உறவின் அருமை பெருமைகளை உணர்த்துகிறது மொத்தத்தில் இவ்விழா ஒரு நல்லிணக்க விழாவாக கொண்டாடப்படுகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »