20/09/2020 5:18 PM

கனவின் விளைவு: காதலிப்பவர் கனவில் பறவைகள் இப்படி வந்தால்..

சற்றுமுன்...

எச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்

திருமலையில் வேற்று மதத்தவர் தரிசனம் விவகாரம்: ஜெகனுக்காக இல்லையென சுப்பாரெட்டி விளக்கம்!

வேற்று மதத்தவர் தரிசனம் தொடர்பில் டிக்ளரேஷன் விவாதம் குறித்து ஒய்வி சுப்பாரெட்டி விளக்கம் அளித்தார்.

ஜெகனுக்காக வளைக்கப் படும் திருப்பதி கோயில் மரபு: நாயுடு எதிர்ப்பு!

டிக்ளரேஷன் தேவையில்லை என்று டிடிடி சேர்மன் செய்த அறிவிப்பை தீவிரமாக கண்டித்தார் நரசாபுரம் எம்பி ரகு ராமகிருஷ்ணம் ராஜு.

திருமலையில் வேற்று மதத்தவர் தரிசன விவகாரம்! சூடு பிடித்த அரசியல்!

இன்று உள்ளது உள்ளபடி இந்த மரபை எடுத்தெறிய வேண்டிய தேவை என்ன என்று அவர் வினா எழுப்பினார்.

அதிர்ச்சி… சதுரகிரி மலை சென்று வந்த 4 பேருக்கு வைரஸ் தொற்று!

சதுரகிரி மகாலிங்க மலைக்குச் சென்ற பக்தர்கள் 4 பேருக்கு தொற்று உறுதி….. மலைக்குச் சென்ற பக்தர்கள் பரிசோதனை
Screenshot_2020_0820_160020
Screenshot_2020_0820_160020

வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.

கிளிகள் பறந்து, மரத்துக்கு மரம் செல்வது போல கனவு கண்டால், பால்ய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவீர்கள். மனம் ரொம்பவே லேசாகிப்போகும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

dream-1

எந்த பறவை இனமாக இருந்தாலும் உங்கள் கனவில் பறவை பறப்பது போல வந்தால் உங்கள் வீட்டில் செல்வச்செழிப்பு உண்டாகும். வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கப் போவதை பலனாக இந்த கனவு தரும்.

பறவை முட்டை இடுவதையோ அல்லது பறவையுடன் முட்டை இருப்பதையோ கனவில் கண்டால் நீங்கள் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில் அல்லது வியாபாரம் விருத்தியடையும் என்பதை உணர்த்துகிறது.

உங்கள் கனவில் பறவை தன் குஞ்சுக்கு இரையூட்டுவது போல வந்தால், உங்கள் இல்லத்தில் மழலை செல்வம் கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

பொதுவாகவே பறவைகளை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் இருக்கும் சூழ்நிலை மாறுபட போவதாக குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம்.

தூக்கணாங்குருவி கனவில் வந்தால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. சுபகாரியங்கள் நடைபெற இருப்பதாக குறிக்கிறது.

மாணவர்களின் கனவில் பறவைகளை கையில் வைத்திருப்பது போல வந்தால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

காதலிப்பவர்களின் கனவில் பறவைகளுக்கு தானியம் இடுவது போல் வந்தால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றி அடையும்.

பறவைகள் இசைப்பது போல அவற்றின் ‘கீச்கீச்’ சத்தம் உங்கள் கனவில் கேட்டால், மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

புறாக்கள் கூட்டமாக இருப்பதைப் போல கனவுகள் வந்தால், உறவினர்களுடன் பகை ஏற்படப் போவதை உணர்த்துகிறது என்று அர்த்தம்.

அதுவே பறந்துகொண்டிருக்கும் புறாவை நீங்கள் பிடிப்பது போல கனவு கண்டால் நட்பு வலுப்படும். நண்பர்கள் ஒன்று இணைவார்கள்.

இரண்டு புறாக்கள் ஒன்றாக பறந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நண்பர்களுக்குள் பகை மூளும் அபாயம் உண்டு.

வவ்வால்களை கனவில் கண்டால் நல்லது நடக்கும். வவ்வால் நம் வீட்டில் இருந்து வெளியேறுவது போல கனவு கண்டால் நம்முடைய வறுமையும் நீங்கி விடுமாம்.

இதுவே வீட்டிற்குள் வருவது போல கனவு கண்டால் வறுமையும் கெட்ட செய்தியும் வருமாம். –

உங்கள் கனவில் வேடன் ஒருவன் புறாவை பிடிப்பது போல வந்தால், அது அவ்வளவு நல்லது அல்ல.

வெள்ளைப் புறாவை கனவில் கண்டால் இட மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படும்.

கருப்பு புறாவை கனவில் கண்டால் கெட்ட செய்தி ஒன்று வரவிருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் கனவில் கழுகு வந்தால், உங்களை தோற்கடிக்க நினைப்பவர்கள் அல்லது பகைவர்களால் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். உங்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

காகம் தலையில் தட்டுவது போல கனவில் வந்தாலும் நல்ல சகுனம் அல்ல. ஏதோ கெட்ட விஷயம் நடக்க இருப்பதை உணர்த்துகிறது. சனி பகவானுக்கு உரிய வாகனமாக காக்கை இருப்பதால் பொதுவாகவே காக்கை கனவில் வருவது நல்லதல்ல.

அதிலும் அண்டங்காக்கை கனவில் கண்டால், நெருங்கியவர் யாரையாவது நீங்கள் இழக்க நேரிடும்.

ஆனால் காக்கை குளிப்பது போல கனவு கண்டால் சனி தோஷம் விலகி நன்மைகள் நடைபெறும்.

உங்கள் கனவில் குயில் வந்தால், உங்கள் மனதுக்கு பிடித்த வாழ்க்கை அமையும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது என்று கொள்ளலாம்.

குயில்கள் சண்டை போடுவதை போல் கனவு கண்டால் அல்லது கருங்குயில் கனவில் கண்டால் நல்லதல்ல என்கிறது

உங்கள் கனவில் கொக்கு வந்தால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும் என்று அர்த்தமாம்.

முற்காலத்தில் விவசாயிகள் கனவில் பறவைகள் அதிகம் வருமாம். இதன்மூலம் பலன்களை யூகித்தறிவார்கள்.

உங்கள் கனவில் கோழியும் அதன் குஞ்சுகளும் கொத்திக் கொத்தி இறை உண்பதுபோல வந்தால், உங்களின் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடத்தின் சீர்செய்யும் பணி நடைபெறும் என்று அர்த்தம்.

சேவல் கூவினாலோ, கோழியையும், சேவலையும் ஒன்றாக கனவில் காண நேர்ந்தாலோ நல்ல விஷயங்கள் நடைபெறும்.

அன்னப்பறவை கனவில் வந்தால் கடவுள் ஆசி பரிபூரணமாக கிட்டும்.

குவா குவா வாத்து கனவில் வந்தால், நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் நிச்சயம் கிட்டும்.

உங்கள் கனவில் கிளி வந்தால் தொழில் வியாபாரம் போன்றவை விருத்தி அடையும்.

அதே கிளி தானியங்கள் உட்கொள்வது போல கனவில் வந்தால் உங்கள் வீட்டில் பொருட்சேதம் உண்டாகும்.

கிளி இறப்பது போல கனவு காணக்கூடாது அது போல கனவு வந்தால் கடன் பிரச்சனை மேலோங்கும்.

தொழில் வளர்ச்சி அடைவதை உணர்த்த கௌதாரி கனவில் வரும்.

மயில் பறப்பது போலவும், தோகையை விரித்து ஆடுவது போலவும் கனவில் வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆந்தைக் கூட்டத்தை கனவில் கனவு கண்டால் நற்செய்தி ஏற்படும்.

அதுவே ஒரே ஒரு ஆந்தையை கனவில் கண்டால் கெட்ட செய்தி வரும்.

ஜோடி குருவியை கனவில் காண நேர்ந்தால் நல்ல செய்தியும், குருவிக் கூட்டை கலைப்பது போன்று கனவு வந்தால் கெட்ட செய்தியும் ஏற்படும்.

கனவில் காணக்கூடாத பறவையாக கழுகும், பருந்தும் உள்ளது. இவைகள் கனவில் வருவது அபசகுனம் தான்.

பிணம் தின்னும் கழுகை கனவில் கண்டால் பேராபத்து வரும். உடல் குறைபாடுகளும், அறுவை சிகிச்சையும் செய்ய நேரலாம். எனவே எச்சரிக்கை தேவை.

தோன்றும்……

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அடிமை வரலாறுகள் திருத்தப் பட்டாக வேண்டும்!

நாடு முழுவதும் வேத ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக் கழகங்கள் துவக்கப்படுவதும் மிக அவசியமே. அதனைச் செய்வதற்கு

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »