ஏப்ரல் 19, 2021, 1:43 காலை திங்கட்கிழமை
More

  கனவின் விளைவு: மரணம் பற்றிய கனவு

  dream-1

  கெட்ட கனவுகளை கண்டால் அவ்வளவு தான் அன்றைய நாள் அவர்களுக்கு எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. சதா
  கண்ட கெட்ட கனவுகளை பற்றி நினைத்து கொண்டே இருப்பார்கள்.
  இதனால் மிகுந்த மனஅழுத்தம் பயத்திற்கு ஆளாகிறார்கள். சிலர்
  நான் கெட்ட கனவு கண்டேன் மனது அடித்து கொண்டே இருக்கிறது.
  கண் துடித்து கொண்டே இருக்கிறது என சொல்வார்கள். அதிலும் மரணம் பற்றிய கனவுகள் வந்தால்… மரணம் பற்றிய சில கனவுகளின்பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

  இயற்கையாக மரணமடைந்தவர்கள் உங்களுடைய கனவில் வந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஏதோவொரு நல்ல விஷயத்தை அவர்கள் உங்களுக்கு சொல்ல வருகிறார்கள் என அர்த்தம். அல்லது நீங்கள் தொழில் அல்லது ஏதாவது நல்ல
  காரியங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு அவர்கள் சொல்லும்
  அறிவுரைகள் நிச்சயம் நடக்கும். அதுபோல அவர்கள் வேண்டாம்
  என சொல்லும் காரியங்களை செய்யும் முன்னர் சிறிது யோசித்து செய்யுங்கள். கண்டிப்பாக அவர்கள் தெரிவிக்கும் எல்லா விசயங்களும் உங்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும்.

  பேரன் பேத்தி என பல தலைமுறைகளை பார்த்து பல தலைமுறைகளை
  கண்டு நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் உங்கள்கனவில் வந்தால் உங்களுக்கு அவர்களுடைய ஆசி எப்பொழுதும் உண்டு என அர்த்தம்.

  துர்மரணம் அடைந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம். உடல்நலத்தில் சிறிது பிரச்சனைகள்
  வரலாம், செல்லுமிடங்களில் விபத்துக்கள், குடும்பத்தில் எதிர்பாராத வாக்குவாதங்கள்சண்டைகள், பிரிவினைகள் ஏற்பட வாய்புள்ளது.

  குழந்தைகள் இறப்பது போல கனவு கண்டால் குழந்தைகளுக்கு சிறிய ஆபத்துக்கள், பிரச்சனைகள், நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

  மனைவி இறப்பது போல கனவு கண்டால் உங்கள் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.

  மனைவி இறந்து சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் நிம்மதியாக இருக்கும்.

  கனவில் இறந்தவருடைய எலும்புக்கூடை கண்டால் நல்லது. முன்னோர்கள் விட்டு சென்ற சொத்துக்கள் உங்களை வந்து சேரும். சதை ஒட்டியது போல் உள்ள எலும்புக்கூடை கண்டால் விரைவில் நீங்கள் பணக்காரர் ஆவீர்கள்.

  உங்களுடைய வீட்டில் உள்ள ஒருவர் மரணமடைவது போல நீங்கள் கனவு கண்டால் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சுப செயல்கள் விரைவில் நடந்து முடியும்.

  தோன்றும்……

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,230FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »