Homeதுணுக்குகள்சுபாஷிதம்: திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

சுபாஷிதம்: திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

marriage1 e1559965767536
marriage1

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!
திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!

ஸ்லோகம்:,
கன்யா வரயதே ரூபம்
மாதா வித்தம் பிதா ஸ்ருதம் !
பாந்தவா: குலமிச்சந்தி
ம்ருஷ்டான்னமிதரே ஜனா:!!

பொருள்: மணப்பெண் மணமகனின் அழகைப் பார்ப்பாள். தாய் மணமகனின் வருமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பாள். தந்தை மணமகனின் கல்வி, நடத்தை போன்றவற்றை கவனிப்பார். குடும்பத்தினர் வம்ச பரம்பரை குறித்து ஆலோசிப்பர். பிற விருந்தினர்கள் கல்யாண விருந்தின் மேல் கவனம் செலுத்துவர்.

விளக்கம்: திருமணம் என்பது வெறும் இரு மனிதர்களின் பந்தம் அல்ல. இரு குடும்பங்களின் இடையே ஏற்படும் அனுபந்தம். தாய், தந்தை, உற்றார், நண்பர்கள் இவ்விதம் பலரும் திருமணம் குறித்து ஆர்வம் காட்டுவர். இது புது மணத் தம்பதிகளுக்கு பக்கபலமாக அமையும். திருமணத்தில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் அழகைப் பார்ப்பதோடு அறிவு குணம் பழக்கவழக்கம் தன்னம்பிக்கை போன்றவற்றின் மீதும் ஆர்வம் கொள்வர். உற்றார் உறவினர் மணமகனின் குடும்பத்தையும் தம்மோடு இணைத்துக் கொள்வர். நண்பர்களும் விருந்தினர்களும் விருந்துண்டு புதுமணத் தம்பதிகளை ஆசீர்வாதம் செய்வர். திருமணம் நன்றாக நடந்தது என்றால் சாப்பாடு நன்றாக இருந்தது என்று பொருள்.

இவ்விதம் திருமண விஷயத்தில் உறவினர்களும் நண்பர்களும் சமூகமும் சேர்ந்து ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது இவை அனைத்தையும் மறந்து வெறும் குருட்டுக் காதலில் விழுந்து அதன் பிறகு தலையெடுக்கும் பிரச்சனைகளைத் தாங்க முடியாமல் விவாக உறவை மட்டுமின்றி வாழ்க்கையையே சின்னா பின்னம் செய்து கொள்கிறார்கள். தற்போது இவ்விதமான சம்பவங்கள் அதிகரிக்கும் காலமாக உள்ளது.

உலக மக்களின் பாராட்டைப் பெற்ற நம் தேசத்தின் திருமண அமைப்பு சாஸ்திரங்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அத்தகைய அமைப்புக்கு அபாயச் சங்கு ஒலிப்பது போல தோன்றுகிறது. தஸ்மாத் ஜாக்கிரதை!

தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,337FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...