ஏப்ரல் 22, 2021, 8:38 மணி வியாழக்கிழமை
More

  கனவின் விளைவு: அழகான வசதியான வீடு கண்டால்…

  dream-1

  உங்கள் கனவில் ஒரு குடிசை வீட்டை பார்ப்பது ஏற்ற இறக்கமாக உள்ள உங்கள் பொருளாதார சிக்கல் விலக போகிறது என்பதை குறிக்கும்.

  நீங்கள் உங்கள் கனவில் வீட்டின் முகப்பில் தோரணத்தோடு கூடிய வாசல் படிகளை பார்த்தால் நல்ல செய்தி வரப்போவதை குறிக்கும்.

  புத்தம் புதிய கட்டிடம் உங்கள் கனவில் வந்தால் வேலையில் மாற்றம், நற்பலன் உண்டாகும் என்பதனை குறிக்கும்.

  உங்கள் கனவில் வீட்டை தேடுவதை போல் காண்பது மற்றும் உங்கள் சொந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் போவது என்பது சில தேவையில்லாத நபர்களின் சந்திப்புகளுக்குப் பிறகு நீங்கள் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், தைரியத்தையும் இழக்க போவதற்கான அறிகுறியாகும்.

  ஒரு உயரமான பல மாடி கட்டிடம் குறித்து கனவு காண்பது உங்களுக்குள் இருக்கும் உள் பிரச்சினைகளை குறிக்கும்.

  உங்கள் கனவில் உங்களுக்கு வாழ்வதற்கு வீடு இல்லாமல் இருப்பதை போல காண்பது எதிர்மறையான சூழ்நிலைகள், துரதிர்ஷ்டம் அல்லது நிதி சிக்கல்கள் அதிகரிக்க போவதன் அறிகுறியாகும்.

  நீங்கள் தற்போது இருக்கும் வீட்டிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் வேறொரு வீட்டிற்கு செல்வதை போல கனவு காண்பது உங்களுக்கு முக்கியமான செய்திகள் வந்துசேரும் அல்லது திடீரென்று வேறு இடத்திற்கு பயணம் செய்வீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

  உங்கள் கனவில் நல்ல அழகான வாழ வசதியாக இருக்கும் வீட்டை பார்த்தால் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும், மேலும் நீங்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள் என்று அர்த்தம்.

  ஆடம்பரமான மாளிகையை குறித்து கனவு காண்பது சமுகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு ஏற்பட போகிறது என்பதன் அறிகுறியாகும்.

  உங்கள் கனவில் வீடு கட்டுவது போல கண்டால், உங்களுக்கு பல சோதனைகள் வரப்போகிறது என்று அர்த்தம்.

  வீடு இடிவது போல் கனவு கண்டால் உறவினர்களால் துன்பம் ஏற்பட போவதற்க்கான அறிகுறியாகும்.

  புதிய வீடு வாங்குவது போல் கனவு கண்டால் சுப காரியங்கள் நடக்கும்.

  ஒருவரது கனவில் வீட்டை விட்டு வெளியேறுவது போல் கண்டால் கடுமையான நோய்களை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுகிறது.

  பாழடைந்த வீடு உங்கள் கனவில் வந்தால் குடும்பத்தில் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு துன்பம் ஏற்பட போவதன் அறிகுறியாகும்.

  உங்கள் கனவில் வீட்டை வாங்குவது பற்றி காண்பது ஒரு சாதகமான அறிகுறியாகும். இத்தகைய கனவு புதிய நண்பர்களின் அறிமுகம், சாதகமான வேலை வாய்ப்புகள், உறவினர்களுடன் நல்லிணக்கம் போன்றவை ஏற்பட போவதை குறிக்கும்.

  கனவில் ஒரு புதியவீட்டை காண்பது நீண்டகாலமாக விரும்பப்பட்ட ஆசை நிறைவேறும் என்பதை குறிக்கிறது.

  ஜன்னல்கள் இல்லாத ஒரு வீட்டை கனவு காண்பது சில பிரச்சினைகள் காரணமாக, நீங்கள் மரணத்தைப் பற்றி சிந்திப்பதை குறிக்கும்.

  தோன்றும்……

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »